Jul 20, 2011

Googleன் அழகிய 199 Fonts - கணினியில் பயன்படுத்த

Google Web Fonts Google Web Fonts
இணையத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் ஏதாவது ஒரு வகையில் கூகுளின் சேவை நமக்கு பயனளிக்கிறது. எழுத்துரு என்பது கணினிக்கு மிகவும் முக்கியமான ஒன்று அதன் மூலமாக தான் நம்முடைய கணினியில் தகவல்களை பதிய முடியும். மற்றும் போட்டோ ஷாப் போன்ற மென்பொருட்களில் டிசைன் செய்ய பல வகையான எழுத்துருக்கள் இருந்தால் தான் நன்றாக வடிவமைக்க முடியும். கூகுள் 199 புது வகையான எழுத்துருக்களை நமக்கு வழங்குகிறது. அந்த எழுத்துருக்களை எவ்வாறு நம் கணினியில் டவுன்லோட் செய்து பயன்படுத்துவது என பார்ப்போம்.


கூகுள் இணைய எழுத்துருக்களுக்கு என்று ஒரு ஒரு தனி தளத்தை உருவாக்கி சேவையை வழங்குகிறது.
இந்த தளத்திற்கு செல்ல இந்த லிங்கில் Google Web Fonts கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


இந்த தளத்தில் 199 அழகிய எழுத்துருக்கள் உள்ளது. அவைகளில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ள அந்த எழுதுருக்கு அருகில் உள்ள Add to Collections என்பதை கிளிக் செய்தால் அந்த பான்ட் உங்கள் பட்டியலில் சேர்ந்து விடும்.
உங்களுக்கு தேவையான அனைத்து எழுத்துருக்களையும் தேர்வு செய்து கொண்டவுடன் மேலே உள்ள Download your Collections என்ற லிங்கை அழுத்தினால் போதும் நீங்கள் தேர்வு செய்த அனைத்து எழுத்துருக்களும் .zip வடிவில் கணினியில் டவுன்லோட் ஆகும்.


உங்களுக்கு கிடைத்த .zip பைலை extract செய்து கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

பதிவுகள் பிடித்து இருந்தால் கருத்துகள் தெரிவிக்கவும்  Join This Site பட்டனை கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts