Jul 19, 2011
Blogger டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி ?
ப்ளாக்கருக்கான டெம்ப்ளேட்களை பல தளங்கள் இலவசமாக தருகின்றன. அவற்றை டவுன்லோட் செய்து, நமது ப்ளாக்கில் நிறுவுவது எப்படி என்று பார்ப்போம்.
இலவச டெம்ப்ளேட்களை தரும் தளங்கள்:
1. http://btemplates.com/
2. http://blogger-templates.anshuldudeja.com/
3. http://splashytemplates.com/
4. http://bloggertemplateplace.com/
5. http://www.bloggertemplatesfree.com/
மேலும் பல தளங்களுக்கு, கூகிள்சர்ச்சில் "Free Blogger Templates" என டைப் செய்து பார்க்கவும்.
டெம்ப்ளேட்களை டவுன்லோட் செய்வது எப்படி?
1. மேல் சொன்ன ஏதாவது ஒரு தளத்தில் சென்று உங்களுக்கு விருப்பமான டெம்ப்ளேட் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
2. அங்கு "Preview" என்பதை க்ளிக் செய்து அந்த டெம்ப்ளேட்டின் மாதிரியை பார்க்கலாம், அல்லது "Download" என்பதை க்ளிக் செய்து அந்த டெம்ப்ளேட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
3. ப்ளாக்கர் டெம்ப்ளேட்டின் Format .xml என்று இருக்கும். ஆனால் அதிகமான தளங்கள் டெம்ப்ளேட்களை zip செய்திருப்பார்கள். அதாவது நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட் .zip என்ற Format-ல் இருக்கும். அதனை Unzip செய்ய, அந்த ஃபைலின் மீது Right Click செய்து, "Extract Here" என்பதை க்ளிக் செய்யவும்.
4. பின் அது folder-ஆக இருந்தால், அதன் உள்ளே சென்று .xml என்று முடியும் ஃபைலை பார்க்கவும். அது தான் டெம்ப்ளேட் ஃபைல்.
புதிய டெம்ப்ளேட்டை நிறுவுவது எப்படி?
1. Blogger Dashboard => Design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.
2. Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.
3. Upload a template from a file on your hard drive என்ற இடத்தில் "Browse" பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கணிப்பொறியில் நீங்கள் டவுன்லோட் செய்த புதிய டெம்ப்ளேட்டின் ஃபைலை தேர்வு செய்து, "Upload" என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
4. அப்பொழுது ஒரு Warning Message வரும். அதாவது sidebar-ல் நீங்கள் வைத்துள்ளgadgets-ளை புதிய டெம்ப்ளேட்டில் சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என கேட்கும்."Keep Widgets" என்பதை தேர்வு செய்யவும்.
5. பிறகு "Your changes have been saved." என்று வரும். உங்கள் புதிய டெம்ப்ளேட் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது என அர்த்தம். View Blog என்பதை க்ளிக் செய்து உங்கள் ப்ளாக்கின் புதிய தோற்றத்தைப் பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
டோரன்ட்ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் டோரன்ட் ல் இலவசமாக கிடைக்...
-
நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்...
-
2 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிட பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்...
-
3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்க...
-
அஸ்ஸலாமு அலைக்கும் அல்-குரான் தமிழ், அரபி, இங்கிலீஷ் மேலும் அபுதாவுத், ஸஹிஹ் முஸ்லிம், ரியாளுஸ் ஷாலிஹின், பிரார்த்தனை பேழை ஆகிய மென்புத்தக...
-
ஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை இன்டர்நெட் செக்யூரிட்டி வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது ...
-
நாம் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கும் மென்பொருள் 48 வேலைகளை செய்கின்றது. இதுஒரு...
nanmba nandri.......................
ReplyDeleteசார் வணக்கம் ,
ReplyDeleteப்ளாக் தலையங்கத்தில் நாம் விரும்பும் புகைப்படம் ,டிசைன் செய்வது எப்படி ?
நட்புடன் ,
கோவை சக்தி
I WANT KNOW ABOUT SENDING FREE SMS THROUGH GOOGLE SMS SERVICE. PL SEND YOUR MOBILE NUMBER TO CONTACT YOU . I WANT SOME CLARIFICATIONS
ReplyDeletePUBLISH YOUR MOBILE NUMBER
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteசகோ நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்திருக்கிரேன். அதில் முகப்பு , இஸ்லாம் ,தூஆக்கள் ,செய்தி தாள் , என்ற லைப்புகளில் அதிகமான் லிங்கை எப்படி இணைப்பது ( அதாவது ) இஸ்லாமென்றால் இஸ்லாம் சார்ந்த வலைப்பூக்களை சேர்ப்பது என்ற விவரத்தை சொல்லமுடியுமா?
எனது வ்லைப்பூ http://pottayya-vki.blogspot.com/
அல்லாஹ் தாங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலியை வழங்குவனாக..
how to set download link & continue to read link
ReplyDelete