வண்ணப் புகைப்படங்கள் தான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது என்றாலும் சில நேரங்களில் அந்தக்கால கருப்பு வெள்ளையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பவர்களும் உண்டு. மேலும் சில நேரங்களில் வண்ணப் புகைப்படத்தை கருப்பு வெள்ளையில் மாற்றி பகிர்ந்து கொள்பவர்களும் உண்டு. சில படங்களுக்கு வண்ணத்தில் இல்லாமல் கருப்பு வெள்ளையாக இருந்தால் நன்றாக இருக்கும். அதற்கு நாம் போட்டோஷாப் போன்ற மென்பொருளுக்கு போகத்தேவையில்லை.
வண்ணத்தில் அமைந்த புகைப்படங்களை எளிதான முறையில் கருப்பு வெள்ளை புகைப்படமாக நொடியில் மாற்றித்தருகிறது Black and white photo maker என்ற மென்பொருள். இதைத் தரவிறக்கி உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளவும்.
இதில் உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்தால் அதன் இயல்பான சைஸ் காட்டப்படும். வேண்டுமென்றால் படத்தை குறிப்பிட்ட அளவில் வெட்டிக்கொள்ளலாம். (Crop images) . பின்னர் உங்களுக்கு தேவையான அளவினைத் தேர்ந்தெடுக்கலாம்.
புகைப்படத்தை விட பெரிதாக்கப்பட்ட மற்றும் சிறிதாக்கப்பட்ட அளவுகள் இருக்கும். அல்லது நீங்களே விருப்பமான அளவினைக்கொடுக்கலாம். பின்னர் எந்த பார்மேட்டில் சேமிக்கப்பட வேண்டும் என்பதைக்கொடுத்தால் உங்கள் படம் கருப்பு வெள்ளையில் மாறிவிடும். இது jpg, bmp, gif, ico, tif போன்ற பட வகைகளை ஆதரிக்கிறது. படம் எப்படித் தெரியும் எனவும் காட்டப்படுகிறது.
Black and white photo maker Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
பதிவுகள் பிடித்து இருந்தால் கருத்துகள் தெரிவிக்கவும் Join This Site பட்டனை கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்