
விளையாட சுவாரசியமான இந்த விளையாட்டில் 5,15,20 எண்ணிக்கையில் அமைந்த லெவல்கள் உள்ளன. உங்களுக்கு ஏற்ற கடின அளவுக்கு ஏற்ப லெவல்களை அமைத்துக் கொள்ளலாம். முதலில் பிடித்த கலரில் உள்ள பாம்பை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிலையிலும் விளையாடும் இடம் (Game background) வித்தியாசமாக அமைக்கப் பட்டிருக்கும். ஆப்பிள்களுடன் இடைஇடையே கற்களும் இருக்கும். அவைகளைச் சாப்பிட்டு விட்டால் ஆட்டத்திற்கான புள்ளிகள் குறைந்து விடும். திரும்பவும் ஆப்பிள்களைச் சாப்பிட்டால் தான் சக்தி கிடைக்கும்.

பழங்களைச் சாப்பிட்டு குறிப்பிட்ட நீளம் வந்தவுடன் ஒரு சாவியை விமானத்தில் கொண்டு வந்து போடுவார்கள். அதைச் சாப்பிட்டவுடன் அடுத்த லெவலுக்கான வழி திறக்கப்படும்.

குறிப்பிட்ட நேரத்தில் செல்லாவிட்டால் பாம்பை பூதம் கொன்று தின்று விடும். அதே போல இருட்டான இடங்களில் சென்றாலும் ஒளிந்திருக்கும் பூதங்கள் பிடித்துக்கொள்ளும். இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது எனக்காட்ட கடிகாரம் வலது புறத்தில் இருக்கும்.
இந்த விளையாட்டை நிறுவி முதல் முறை விளையாடும் போது Register கொடுக்கவும். இதற்கான பெயரும் ரெஜிஸ்டர் எண்ணும் தரவிறக்கிய போல்டரிலேயே Registration என்ற கோப்பில் உள்ளது.
AxySnake - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும் 4mb
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்