Aug 16, 2011

Passport Size போட்டோகளை எளிதாக உருவாக்க


இன்று பல சந்தர்ப்பங்களில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோகள் தேவைப் படுகின்றன. வேலைக்கு விண்ணப்பம் செய்தல், கல்லூரியில், ID Card, Sim Card வாங்க போன்ற பல சமயங்களில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோகள் அவசியமான ஒன்றாகும். நம்மிடம் டிஜிட்டல் கேமராவில் எடுத்த போட்டோகள் அல்லது வேறு ஏதேனும் நல்ல போட்டோகள் இருக்கலாம். ஆனால் நிறைய பேருக்கு எப்படி அதை பாஸ்போர்ட் அளவுக்கு மாற்றுவது எனத்தெரியாது. அவசரத்தின் போது பலரும் போட்டோ ஸ்டுடியோவுக்கே போகிறோம்.
போட்டோஷாப் தெரிந்தவர்கள் இருக்கிறபோட்டோவை வைத்தே பாஸ்போர்ட் சைஸ் உருவாக்குவார்கள். ஆனால் எந்த மென்பொருளும் இன்றி எளிதாக பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உருவாக்க ஒரு இணையதளம் உள்ளது. இதில் சிறப்பான விசயம் என்னவென்றால் உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் ஏற்ற அளவில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, விசா, ஐடி கார்டு போன்ற தேவைகளுக்கு உருவாக்க முடியும்.

முதலில் இந்த http://www.epassportphoto.com/ இணையதளத்திற்குச் சென்று Country என்ற பிரிவில் உங்கள் நாட்டைத் தேர்வு செய்யவும். Photo என்ற பிரிவில் வழக்கமான பாஸ்போர்ட் போட்டோ, விசா, ஐடி கார்ட்
(Passport, visa, ID card) என்ற மூன்று பிரிவுகளில் தேவையானதை தேர்வு செய்யுங்கள். பின்னர் Get my Passport Photos என்பதைக் கிளிக் செய்யவும். 


இதன் பின் வரும் பக்கத்தில் புகைப்படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்று குறிப்பு தரப்பட்டுள்ளது. அம்புக்குறி காட்டிஉள்ள Choose File என்பதைக் கிளிக் செய்து உங்களின் படத்தைத் தேர்வு செய்து Next கொடுக்கவும்.


உங்கள் படம் அப்லோடு ஆனவுடன் Click and Drop என்பதைக் கிளிக் செய்து
தேவையான அளவுக்கு முகம் நன்றாகத் தெரிகிற மாதிரி தேர்வு செய்து விட்டு Next கொடுக்கவும்.


இதில் Professional மற்றும் Standard ஆகிய சேவைகள் உள்ளன். நாம் கட்டணமில்லா Standard சேவைக்கு No thanks என்பதைக் கிளிக் செய்தால் உருவாக்கப்பட்ட பாஸ்போர்ட் போட்டோகளை Download செய்து கொள்ளலாம்.



Download செய்யப்பட்ட உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கிழே உள்ளது போல வந்து இருக்கும்.


பதிவுகள் பிடித்து இருந்தால் Post a Comment பகுதியில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். Join This Site கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்துகொள்ளவும்.

2 comments:

  1. இதில் முயற்சி செய்து பயன் இல்லை

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts