Jun 17, 2011

டெஸ்டொப்பில் இருந்து விரைவாக Facebook இற்கு புகைப்படங்களையும் விடியோக்களையும் Upload செய்து கொள்ளலாம்


[உங்கள் கணணியில் இருந்து மிக விரைவாகவும் இலகுவாகவும் உங்கள் புகைப்படங்களையும் விடியோக்களையும் facebook இல் தரவேற்றிக்க கொள்ள உதவும் ஒரு மென்பொருள் பற்றிய பதிவு...]

உங்கள் கணணியில் டெஸ்க்டாப் திரையில் இருந்தே உங்கள் புகைப்படங்களையும் விடியோக்களையும் மிக விரைவான Facebook ல் அப்லோட் செய்து கொள்ள உதவும் ஒரு மென் பொருளே bloom என்கிற ஒரு இலவச மென்பொருளாகும் .. இதன் பதிப்பு Bloom 2.9.1 இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது.. 

இந்த மென்பொருளை பயன்படுத்தி அப்லோட் செய்வதோடு டெஸ்க்டாப்பில் இருந்தே நண்பர்களுக்கு Tag செய்யவும் முடியும்,

மேலும் உங்களுடையதோ அல்லது உங்கள் நண்பர்களது புகைப்படங்களையும் வேகமாக டவுன்லோட் செய்யவும் முடிவதோடு அவர்களது அல்பத்தை தரவிறக்காமலேயே கணணி முழுத்திரையில் slideShow வாக கண்டுகளிக்கவும் முடியும்

Bloom 2.9.1 இன் வசதிகளை பெற்றுக்கொள்ள முதலில் இதனை facebook இன் மூலம் login செய்து கொள்ள வேண்டும்
  • இதற்க்கு Bloom மென்பொருளை open செய்து login என்ற பட்டனை அழுத்த கீழ் உள்ளது போல் தோன்றும்
  • பின் அதில் உள்ள login என்பதை அழுத்தியவுடன் புதிதாக உங்கள் இணைய உலாவியில் Facebook இனை login செய்யுமாறு ஒரு விண்டோ திறக்கும். Passwordனை கொடுத்து login செய்தவுடன் request to permission கேட்கும் அதனை Allow செய்யவும்.
  •  பின் மிண்டும் உங்கள் மென்பொருளுக்கு வந்து I have successfully login என உள்ளதை அழுத்தவும்...
(இந்த செயன்முறை முதல்முறை செய்யும் போது மட்டுமே கேட்கும்.. பின்னர் login செய்யும் போது facebook user name password ஆகியவற்றை மட்டும் கொடுத்தால் போதுமானது.)

Bloom மென்பொருளை உபயோகித்து Facebook இற்கு அப்லோட் செய்தல்.

  • புகைப்படத்தை புது அல்பமாக upload செய்ய create album என்பதை அழுத்தி பின் அல்பம் பெயர் விபரத்தை கொடுத்து drag Photo or folder here என்று உள்ள இடத்தில் உங்கள் புகைப்படத்தையோ அல்லது போல்டரையோ இழுத்துவிட்டு பின் upload எனும் பட்டனை அழுத்தவும்
  • ஏற்கனவே உள்ள அல்பத்திற்க்கு புகைப்படத்தை அப்லோட் செய்ய profile - > my album என்பதை அழுத்தி குறித்த அல்பத்தை தெரிவு செய்து அதனுள் புகைப்படத்தை இழுத்து விட்டு பின் upload எனும் பட்டனை அழுத்தவும்
  • Upload Panel


நண்பர்களின் புகைப்படத்தை பார்வையிட
  • நண்பர்களின் புகைப்படத்தை பார்வையிட friends என்பதை அழுத்தவும் பின் வரும் நண்பர்கள் பட்டியலில் குறித்த நண்பரை தெரிவு செய்து புகைப்படத்தை அழுத்துவன் மூலம் புகைப்படங்களை முழுத்திரையில் பார்வையிடலாம்


புகைப்படத்தை download செய்தல்
  • குறித்த அல்பத்தையோ புகைப்படத்தையோ தெரிவு செய்து பின் மேல் உள்ள மெனுவில் Action --> Download Album என்பதை அழுத்துவதன் மூலம் தரவிறக்கி கொள்ள முடியும்
Bloom 2.9.1 தறவிறக்க 
Windows 32 bitWindows 64 bit

1 comment:

  1. Ever wanted to get free Instagram Likes?
    Did you know you can get these ON AUTO-PILOT & TOTALLY FOR FREE by using Like 4 Like?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts