Jun 1, 2011

கணிணியை சுத்தமாகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க


Advanced System Care 4கணிணியில் அன்றாட வேலைகளை மட்டுமே செய்கின்ற பலருக்கு கணிணியை எப்போதும் மேம்பட்டதாக வைத்துக் கொள்ளும் மனநிலையில் இருப்பதில்லை. நல்லதாக பார்த்து கணிணி வாங்கியிருந்தாலும் இப்போது மெதுவாக இயங்குகிறது என்று வருத்தப்படுவார்கள். ஏன் என்றால் கணிணியில் தேங்கும் பிரச்சினைகளை நாம் கண்டறிந்து சரிசெய்வதில்லை. ரெஜிஸ்ட்ரியில எதாவது பிரச்சினையா, ஷார்ட்கட் பிரச்சினையா, கணிணியில் நமக்குத் தெரியாமல் எதாவது அமைப்புகள் மாறியிருக்கிறதா போன்றவற்றை எளிதாக நம்மால் அறிந்து கொள்ள முடியாது.


கணிணியை சுத்தமாகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும் அவசியமான மென்பொருள் தான் Advanced system care. இந்த மென்பொருளின் புதிய பதிப்பாக 4 ம் பதிப்பு வந்துள்ளது. இதில் பல வசதிகள் கொடுக்கப் பட்டுள்ளன.

1.கணிணியைப் பாதுகாக்கும், சுத்தப்படுத்தும் வேலையைச் செய்யும் இதன் தொழில்நுட்ப நிரல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

2.இதன் புதிய இடைமுகம் கண்ணைக் கவருகிறது. மேலும் அழகான ஸ்கின்கள் தரப்பட்டுள்ளன.
Advanced System Care 4
3. Turbo Boost Mode – இது உங்கள் கணிணியின் பின்புலத்தில் இயங்கும் தேவையில்லாத புரோகிராம்கள், சர்விஸ்கள் போன்றவற்றை ஒரே கிளிக்கில் நிறுத்தி இயங்கும் RAM நினைவகத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறது. இதனால் கணிணி வேகமாகும்.
Advanced System Care 4
4. ஒரே கிளிக்கில் கணிணியின் 10 பொதுவான பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்க்கும். (Malwares, privacy sweep, shortcut fix, registry fix, junk files, system optimize)

5. மால்வேர்கள் எதேனும் இருந்தாலும் அவற்றையும் நீக்குகிறது.

6. டாஸ்க் பாரில் கணிணியின் செயல்பாடுகளை எளிதாக அறிந்து கொள்ளலாம். புதியதாக ஏதெனும் சிக்கல் வந்தால் டாஸ்க் பாரில் காட்டிவிடுகிறது. அதனைக் கிளிக் செய்தால் சிக்கல்களை நிவர்த்தி செய்துவிடும்.
Advanced System Care 4
கணிணியை வேகப்படுத்த அவசியம் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள் 


   Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

2 comments:

  1. இவ்வளவு பயன்மிக்க மென்பொருள் பற்றி அறிமுகப்படுத்தியதற்கு மிக மிக நன்றி! ஆனால் இது எவ்வளவு விலை என்று கூறுங்களேன்!

    ReplyDelete
  2. I'm using AVG Antivirus for many years now, I'd recommend this product to everyone.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts