


பொதுவாக நாம் நமது தொலைபேசிகளிலே எழுத்துக்கள் மற்றும் இலக்கங்களைப் பயன்படுத்தி சிறிய உருவங்களை வரைந்து நண்பர்களுக்காக அனுப்புவதுண்டு.
ஆனால் உங்கள் புகைப்படங்களை; அவ்வாறு எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தி வரைந்தால் எவ்வாறு இருக்குமென எண்ணுகின்றீர்களா?
அவ்வாறாயின், குறியீடுகள் மூலம் உங்கள் புகைப்படங்களை எவ்வாறு உருவாக்கலாம் என்ற எண்ணத்திற்கு தீர்வாக ஒரு தளம் உள்ளது.
இங்கு நீங்கள் உங்களுக்கு விருப்பமான படங்களை upload செய்தபின் விரும்பிய குறியீடுகளை கொடுத்தால் அது அக் குறியீடுகளைப் பயன்படுத்தி படம் வரைந்து தரும்.
விரும்பின் நீங்கள் அப் படத்தை சேமித்தும் கொள்ளலாம். சேமிக்கும்போது அது “.txt” வடிவிலேயே சேமிக்கப்படும். அதாவது Notepad இல். விரும்பின் சேமித்த படத்தில்கூட நீங்கள் மாற்றம் செய்து ரசிக்கலாம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்