நம்மிடம் இருக்கும் வீடியோப் படங்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க வேண்டி வரும். அதை யூடியுப் தளத்தில் அல்லது வேறு ஏதேனும் தளங்களில் பகிர்வோம். அல்லது நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வரும். சில கோப்புப் பகிரும் (File Sharing) இணையதளங்களில் கோப்புகளுக்கு அளவு நிர்ணயம் செய்திருப்பார்கள். இவ்வளவு அளவு கொண்ட கோப்புகளை மட்டும் தான் பதிவேற்ற வேண்டும் என கட்டுப்பாடுகள் இருக்கும். அதில் நாம் கோப்புகளை பல பாகங்களாக வெட்டி பதிவேற்றலாம்.
இணையத்தில் பல வீடியோ கட்டர் மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. எளிதாகவும் விரைவாகவும் செயல்படும் இந்த மென்பொருளின் பெயர் VidSplitter. இந்த மென்பொருள் மூலம் avi, mpeg, wmv, asf போன்ற வீடியோ கோப்புகளை பல பாகங்களாகப் பிரிக்கலாம்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் பிளாஷ் டிரைவ், சிடி/டிவிடி போன்றவற்றின் அளவுக்கு வருகிற மாதிரியும் வெட்ட முடியும். இல்லை 100 Mb என்று கோப்பின் அளவு வைத்து விட்டால் பெரிய கோப்புகளை ஒவ்வொன்றாக பிரித்துக் கொடுத்து விடும்.
இதில் படத்தைத் தேர்வு செய்யும் முறை மற்றவற்றை விட எளிதாக இருக்கிறது. இதன் ஸ்லைடர் அமைப்பு எளிதாக தேவைப்படும் வீடியோவினை மட்டும் நகர்த்தி தேர்வு செய்து கொள்கிற மாதிரி இருக்கிறது. இதன் முக்கியமான விசயம் என்னவென்றால் வேகமாகவும் தரமான குவாலிட்டியுடன் வீடியோவினைப் பிரித்து தருகிறது.
Download - vidsplitter
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்