Oct 10, 2012

சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம்


சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.

வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.

இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

10.10.2012

சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்

மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல் நிலை குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய வேண்டி வந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான் செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள் மூலமோ எனது சிகிச்சைக்காக செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத் தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு.

ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத அளவுக்கு பெரும் செலவு ஏற்படும் நிலை வந்தால் நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய உதவியையும் நான் பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் முடிவு செய்யும் வகையில் என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க அடிபடையில் பதில் இருக்கும் போது பித்னாக்களுக்குப் பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது.

நான் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அடுத்த நிமிடம் உளவுத்துறைக்கு தெரிந்து எதிரிகளின் இயக்கங்களுக்கும் உடனே தெரிந்து விடும். அவர்கள் வழியாக நம் நிர்வாகிகளுக்குத் தெரியவரும் போது அது ஜமாஅத்தைப் பாதிக்கும். மனிதனுக்கு நோய் வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும் இல்லாமல் எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய் வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல் நோயை நீங்கள் மறைப்பதாக நான் கருதுகிறேன்.

புற்றுநோய் என்பது ஆபத்தான நோய் என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால் பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை.

அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்

10.10.2012


பி. ஜைனுல் ஆபிதீன் இவர் கடந்த 30 ஆண்டுகள் தவ்ஹீத் என்னும் எகத்துவ (ஒரே கடவுள்) கொள்கையினை தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கின்றார். பல இசுலாமிய நுால்களை எழுதியுள்ளார் மற்றும் குர்ஆனைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அந்நஜாத், அல்ஜன்னத், அல்முபீன், ஏகத்துவம், உணர்வு உட்படப் பல பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் என்ற சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் நன்கு அறிமுகமானவர். இசுலாம் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வண்ணம் ஆன்லைன்பிஜே என்னும் இணையதளத்தின் இயக்குனராகவும் உள்ளார்.
பிறப்பும் கல்வியும்

பீர் முஹம்மது, மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ம் ஆண்டு, பெப்ரவரி மாதம், பத்தாம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில், எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர், காலம் சென்ற தனது மூத்த சகோதர் பீ.எஸ்.அலாவுதீன் (மன்பஈ) போன்று, மார்க்கக் கல்வியையே தேர்ந்தெடுத்துக் கற்று, பட்டம் பெற்றார்.
திருமணம்

பிஜே 1980ஆம் ஆண்டு வரதட்சணை வாங்காமலே திருமணம் செய்தார். வரதட்சணைக் கொடுமை தாண்டவமாடும் ஒரு நாட்டில், வரதட்சணை வாங்காத இவரின் வீரமிக்க இச்செயல், அன்று வினோதமாக நோக்கப்பட்டுக் கொச்சைப்படுத்தப்பட்டது. அதை அவர் கண்டு கொள்ளவில்லை. அதன் விளைவாக இன்று பலவாயிரம் இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யத் துணிவு பெற்றுள்ளனர். அத்தோடு, வரதட்சணைக் கொடுமையை அறியாமல் அப்போது வாங்கிய தொகையை, பகிரங்கமாக திருப்பிக் கொடுக்கின்றனர்.
பீஜே அவர்களும் காலம்சென்ற அவரது அண்ணன் அறிஞர் பீ.எஸ். அலாவுத்தீன் மன்பயீ அவர்களும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ததற்கு ஒரு வாத்தியாரின் பரிதாபகரமான தற்கொலை முடிவு காரணமாக அமைந்தது. பல பெண் குழந்தைகளையுடைய அவர் தனது பெண் குமருகளை கரை சேர்க்கப் வரதட்சணைப் பணம் இல்லாததால் ஆயுள் காப்புறுதி செய்து விட்டு, லாரியில் மோதி தற்கொலை செய்து கொண்டார்.
இது தற்கொலை என்பதால் அவரது குடும்பம் குடும்பத் தலைவனையும் இழந்து காப்புறுதிப் பணமும் கிடைக்காமல் தவித்தது. வரதடசணையின் இக்கோர முகம் இவர்களது வாழ்வில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.அப்போது, ஏகத்துவக் கொள்கையில் பெரியளவு தெளிவு கிடைக்காத நேரம். இப்போதது, வரட்சணைக்கு எதிரான பிரசாரத்தை பீஜே அளவுக்கு யாரும் செய்யவில்லை. அறியாமல் வாங்கிய வரத்சணையை திரும்பக் கொடுக்கும் அளவு பெரும் தாக்கத்தை அவரது பிரசாரம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது பொருளாதார நிலை

தற்போது சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். தனது சொந்த ஊரில் தனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்த ஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு செண்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது அவரது சம்பாத்தியம் அல்ல.அவரது குடும்ப நகைகளை விற்று மதுரையில் ஒர் அச்சகம் நடத்தினார். மிஷினை அவரே இயக்குவார்! பைண்டிங் செய்வார்! இன்னும் அச்சு சம்மந்தமான அனைத்து வேலைகளையும் அவரே செய்து வந்தார். இதனிடையே தான் தாஃவா பணியையும் செய்து வந்தார்.

தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு அவர் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் சென்னைக்கு வருவதற்காக அச்சகத்தை விற்றார். தனது ஊரைச் சேர்ந்த அப்போதைய தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தம்முடைய ஒரு வீட்டை விற்க இருப்பது தெரிந்ததால் அச்சகத்தை விற்ற பணத்தில் அந்த வீட்டை வாங்கினார். தனது பூர்வீக இடத்தில் சொந்த வீடு ஒன்று கட்டினால் நல்லது என்று அவர் நினைத்த போது, அதற்கான நிதி அவரிடம் இல்லை. அப்போது தான் வாங்கிய வீடு நல்ல விலைக்குப் போகிறது என்பது தெரிந்ததால் அதை விற்று விட்டு பிஜேயின் பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமே என்று ஹைதர் அலி ஆலோசனை கூறியதன் பெயரில். அதை விற்று அதில் தான் தனது பூர்வீக இடத்தில் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு பெட்ரூம் உள்ள சிறு வீடு கட்டினார்.





அண்ணன் பீஜே அவர்கள் நோய்வாய்பட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் நம்மிடம் பொருளாதர ரீதியாக எதையும் எதிர்பார்க்காமல் நம் பிரார்த்தனையை மட்டுமே எதிர் பார்க்கும் அன்பு அண்ணன் அவர்களுக்காக நாம் இறைவனிடம் பிரார்த்திப்போம்.பூரண குணமாக இறைவனே போதுமானவன்.



7 comments:

  1. நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனையிலும் அண்ணனின் உடல் நலனையும் சேர்த்துக் கொள்வோம்.

    ReplyDelete
  2. ஸலாம்

    //அண்ணன் பீஜே அவர்கள் நோய்வாய்பட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் நம்மிடம் பொருளாதர ரீதியாக எதையும் எதிர்பார்க்காமல் நம் பிரார்த்தனையை மட்டுமே எதிர் பார்க்கும் அன்பு அண்ணன் அவர்களுக்காக நாம் இறைவனிடம் பிரார்த்திப்போம்.பூரண குணமாக இறைவனே போதுமானவன். //

    படிக்கும் போதே மனது கனக்கிறது ...

    அல்லாஹும்மஸ்பீ பீ ஜே

    இறைவா பீ ஜெ விற்கு குணம் அளிப்பாயாக ..!!!

    யா அல்லாஹ் ! என் அண்ணன் பீ ஜே யை எந்தவொரு சிரமம் இல்லாமல் நோயை குணப்படுதுவையாக ... குணப்படுதுபவர்களில் நீயே சிறந்தவன் ...


    ReplyDelete
  3. நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனையிலும் அண்ணனின் உடல் நலனையும் சேர்த்துக் கொள்வோம்.

    ReplyDelete
  4. இறைவா பீ ஜெ விற்கு குணம் அளிப்பாயாக.ஆமீன்!!!

    ReplyDelete
  5. சலாம் சகோதரர் PJ அவர்களுக்கு துவா செய்வதுடன் என் ப்ளாக் மூலம் நம் சகோதரர்களையும் துவா செய்ய அன்புடன் வேண்டிருக்கிறேன்

    ReplyDelete
  6. ellamvalla iraivan nanmaitaruvan balamurugan p

    ReplyDelete
  7. யா அல்லாஹ் ! என் அண்ணன் பீ ஜே யை எந்தவொரு சிரமம் இல்லாமல் நோயை குணப்படுதுவையாக ... குணப்படுதுபவர்களில் நீயே சிறந்தவன் ...
    AAMEEN AAMEEN AAMEEN !!!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts