Sep 27, 2011

FaceBookன் புதிய அழகான தோற்றத்தை பெறலாம் வாங்க

பேஸ்புக் நிறுவனம் தற்போது பல்வேறு புதிய வசதிகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் Timeline என்ற புதிய தோற்றம். இந்த புதிய தோற்றம் அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை இப்பொழுது Developer மட்டும் வழங்கி உள்ளது. உங்கள் பேஸ்புக் கணக்கில் புதிய தோற்றத்தை எப்படி கொண்டு வருவது என்று பார்ப்போம்.


முதலில் இங்கே கிளிக் செய்து Facebook Developer  தளத்திற்கு செல்லவும். வரும் விண்டோவில் உள்ள Allow என்பதை கிளிக் செய்து உள்ளே செல்லவும். 




வரும் விண்டோவில் Create New App என்பதை கிளிக் செய்யவும்.




வரும் விண்டோவில் App Display Name, App namespace என்ற இரு பகுதி இருக்கும் அதில் உங்களுக்கு விரும்பிய பெயரை கொடுக்கவும். அதில் App Namespace என்ற இடத்தில நீங்கள் கொடுக்கும் பெயர் Available என்று பச்சை நிறத்தில் வரவேண்டும்.




அடுத்து Security Check என்ற பகுதியில் verification code கேட்க்கும், அதை சரியாக கொடுத்து submit பட்டனை அழுத்தவும். வரும் விண்டோவில் உள்ள Open Graph கிளிக் செய்யவும்.




அதில் உள்ள இரண்டு சிறு கட்டங்களில், அதில் உள்ள ஏதாவது ஒரு பெயரை கொடுத்து Get Started என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.அதில் கடைசியில் உள்ள Save Changes என்ற பட்டனை அழுத்தவும். 




இதற்க்கு அடுத்து ஓபன் ஆகும் இரண்டு விண்டோக்களிலும் இதே போல கடைசியில் உள்ள Save Changes என்ற பட்டனை அழுத்தவும்.





கடைசியில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அவ்வளவுதான்.



இப்போது உங்கள் பேஸ்புக்கின் Home page க்கு செல்லுங்கள். கிழே படத்தில் இருப்பது போல Message வந்து இருக்கும். அதில் Get It Now என்பதை கிளிக் செய்யவும். உடனே உங்களின் பேஸ்புக் கணக்கு புதிய தோற்றத்தில் மாறிவிடும். 





மறக்காமல் கருத்துக்களையும், ஓட்டையும் பதிவு செய்யுங்கள். +1 கிளிக் செய்துவிட்டு போங்களேன். 

5 comments:

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts