Mar 6, 2011

எல்லா விதமான வீடியோ பைல்களையும் ஒன்றிணைக்க இலவச மென்பொருள்


Free Video Joiner

தனித்தனி வீடியோ பைல்களாக இருக்கும் வீடியோக்களை ஒன்றிணைத்து ஒரே வீடியோ பைலாக உருவாக்க இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த மென்பொருள் சிறப்பம்சம் என்னவெனில் தனித்தனி வீடியோ பைல் பார்மெட்களையும் ஒன்றிணைத்து ஒரே வீடியோ பைலாக உருவாக்க முடியும்.

Download Free AVI/MPEG/WMA/MP4/FLV Video Joiner Software



மென்பொருளை தரவிறக்க  சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் உள்ள Add Video என்ற பொத்தானை அழுத்தி வீடியோ பைலகளை தேர்வு செய்து கொள்ளவும்.

Interface




அடுத்து Next பொத்தானை அழுத்தி எந்த பைல் பார்மெட்டில் வீடியோக்கள் கன்வெர்ட் ஆக வேண்டுமோ அந்த பைல் பார்மெட்டை தேர்வு செய்து கொண்டு, பைல்களை எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

Easy joining





பின் Join now பொத்தானை அழுத்தவும். இப்போது வீடியோ பைலானது கன்வெர்ட் செய்யப்பட்டு, ஒரே பைலாக ஒருகிணைக்கப்படும்.




Format Settings



இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வீடியோ பைல்களானது ஒருகிணைக்கப்பட்டு ஒரே வீடியோ பைலாக சேமிக்கப்பட்டு இருக்கும்.

இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய வீடியோ பைல் பார்மெட்கள்:-


இன்புட் பைல் பார்மெட்கள்:-
  • HD Video, AVI , FLV, SWF, DV AVI, MP4, WMV, 3GP, 3G2, MOV, QT, DVD, VOB, MPEG-1, 2, 4, MOD, MPG, DAT, RM, RMVB, ASF, H.263, H.264, MKV, TS மற்றும் பல வீடியோ பைல் பார்மெட்கள்


அவுட்புட் பைல் பார்மெட்கள்:-
  • AVI, MP4, FLV, SWF, MPEG, RM, WMV, MOV & 3GP

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts