Mar 18, 2011

Mar 14, 2011

Angry Birds - உலகத்தைக் கவர்ந்த விளையாட்டு இலவசமாக!



2010 ஆம் வருடத்தின் மிகவும் பிரபலமான மற்றும் வர்த்தக ரீதியாகவும் வெற்றியடைந்த விளையாட்டு தான் Angry Birds. இதை முதன் முதலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் விளையாடும் படி Rovio என்ற நிறுவனம் கொண்டு வந்தார்கள். அறிமுகமான சில மாதங்களிலேயே இந்த விளையாட்டு ஆப்பிளின் ஸ்டோரில் (Apple Store) 12 மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. இதைக்கண்ட அந்த நிறுவனம் இதை மற்ற ஸ்மார்ட் போன்களுக்கும் ஆண்ட்ராய்டு கருவிகளுக்கும் தயாரித்தது. கடைசியாக விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளிலும் விளையாடும் படி உருவாக்கியுள்ளது.

Mar 6, 2011

எல்லா விதமான வீடியோ பைல்களையும் ஒன்றிணைக்க இலவச மென்பொருள்


Free Video Joiner

தனித்தனி வீடியோ பைல்களாக இருக்கும் வீடியோக்களை ஒன்றிணைத்து ஒரே வீடியோ பைலாக உருவாக்க இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த மென்பொருள் சிறப்பம்சம் என்னவெனில் தனித்தனி வீடியோ பைல் பார்மெட்களையும் ஒன்றிணைத்து ஒரே வீடியோ பைலாக உருவாக்க முடியும்.

Download Free AVI/MPEG/WMA/MP4/FLV Video Joiner Software

யூடியூப் மியூசிக் டவுண்லோடர் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்


யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் யூடியூப் தளத்தில் இருந்து ஆடியோவை மட்டும் தனியே பதிவிறக்கம் செய்ய அதிக வாய்ப்புகள் இல்லை. யூடியூப் தளத்தில் அனைவருமே தங்களது படைப்புகளை வெறும் வீடியோவாக மட்டுமே பதிவேற்றம் செய்கிறனர். அவ்வாறு இருக்கும் வீடியோவிலிருந்து தனியே ஆடியோவை மட்டும் பிரித்தெடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. முதலில் யூடியூப் தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் எதாவது ஒரு கன்வெர்ட்ரை பயன்படுத்தி  பயன்படுத்தி வீடியோவிலிருந்து ஆடியோவை மட்டும் தனியே பிரித்தெடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல் யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோக்கள் பலவும் FLV பைல் பார்மெட்டில் இருக்கும். இதனை நாம் கன்வெர்ட் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.




ஆன்லைனில் அனைத்து விதமான பைல்பார்மெட்களையும் கன்வெர்ட் செய்ய அருமையான தளம்


பைல் பார்மெட்களை ஒரு பார்மெட்டில் இருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். இவ்வாறு பைல் பார்மெட்களை கன்வெர்ட் செய்ய நாம் மென்பொருள்களை பணம் கொடுத்து வாங்க வேண்டும். அவ்வாறு வாங்க இயலாதவர்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கும் மென்பொருளை பயன்படுத்தி கன்வெர்ட் செய்து கொள்ளலாம். ஆனால் தனித்தனி பைல் பார்மெட்களை கன்வெர்ட் செய்ய நாம் பல மென்பொருள்களில் உதவியை நாட வேண்டும். குறிப்பாக வீடியோ என்றால் அதற்கு ஒரு மென்பொருள் டாக்குமெண்ட் பைல்கள் என்றால் அதற்கு ஒரு மென்பொருள் அவ்வாறு இல்லாமல் அனைத்து விதமான பைல்களையும் ஒரே தளத்தில் இருந்தவாறே கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். மென்பொருள்கள் இல்லாத நேரத்தில் பைல்களை கன்வெர்ட் செய்ய இந்த தளம் உதவியாக இருக்கும்.



Mar 4, 2011

பனோரமா வகையில் ஒளிப்படங்களை மாற்ற மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்


எல்லோருக்கும் ஒளிப்படங்களை எடுப்பதிலும் அதை டிசைன் செய்வதிலும் ஆர்வம் இருக்கும். அழகான நதி, மலை, காடு என போட்டோ எடுத்து மகிழ்வார்கள். ஆனால் இப்படி புகைப்படங்களை எடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது கோணத்தை (angle) எடுக்க முடியும். பெரிய கட்டிடம் அல்லது நீளமான இயற்கை காட்சியாக இருக்கும் பட்சத்தில் ஒன்றும் செய்யமுடியாது. நீளமாக உயரமாக இருக்கும் காட்சிகளை சுற்றிச்சுற்றி 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்படும் ஒளிப்படங்களே பனோரமா படங்கள் (Panorama images) எனப்படுகின்றன. ஆனால் நமது டிஜிட்டல் கேமராவில் இந்த வசதி இல்லாத போது என்ன செய்ய முடியும்? 

Mar 2, 2011

மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:


முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று Opera Mini டவுன்லோட் செய்யவும்

Popular Posts