May 28, 2012

பெண்களின் மானத்தை விலை பேசும் Camera & face book திருகுதாளங்களும் தற்காப்பும்!


இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் எம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதேவேளை மறுபுறம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியும் வருகிறது. எதை எந்த நோக்கதிற்காக பயன்படுத்தினால் மனிதகுலத்திற்கு நன்மை கிட்டுமோ அதை அப்படி பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய உலகின் யதார்த்தம் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.

நீங்கள் நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (அல்-குர்ஆன் 5:02)
தன் சக மனிதனுக்கு கேடுவிளைப்பதையே தனது தினசரி தொழிலாக நினைத்து செயல்பட தொடங்கி விட்டான் மனிதன். பணத்திற்காக எதையும் செய்ய துணிந்து விட்டான். அந்த வகையில் பெரும்பான்மை மக்களால் கவனிக்கபடாத உடை கழட்டும் ஒரு வக்கிர சைக்கோ கூட்டத்தை தோலுரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

கையடக்க கேமராக்கள், மொபைல் வீடியோ கேமராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய கேமராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

இதை எத்தனை பேர் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி! மொபைல் கேமராக்கள், கையடக்க வீடியோ 
கேமராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அதை தடுக்கும்- தவிர்க்கும் வழிமுறையையும் இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

பொது இடங்களில் 
கேமராக்கள்:

பொது இடங்களில் – குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்கட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் 
கேமராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

கேமராவுடன் உள்ள தொலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டு பொது இடங்களில் நடமாடும் பெண்களை அவர்கள் அறியாவண்ணம் சமயம் பார்த்து ஆபாசமாகப் படம் பிடிக்கும் ஈன மனம் படைத்தோர் இன்றிய உலகில் நம்மத்தியில் பெரும் அளவில் பெரு கிவிட்டனர்.

கல்லூரி விடுதிகளில்:

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில் – மற்றும் மலசல கூடங்கள், குளியலறைகளில் 
கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அண்மையில் இந்தியாவில் ஒரு கல்லூரி விடுதியிலிருந்து 09 கமராக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Face Book,TWITTER- ORKUT போன்ற தளங்களில் பல பெண்கள் தங்கள் புகைப்படத்தை UPLOADசெய்து இருகிறார்கள். சில மோசடிக்காரர்கள் அதை தேடி டவுன்லோட் செய்து கொண்டு PHOTOSHOP SOFTWARE துணைகொண்டு அந்த பெண்களின் முகங்களை நிர்வாண போட்டோவோடு இணைத்து, அதை இன்டர்நெட்டில் விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.

மேலும் பாடசாலை மாணவிகளின் போட்டோக்களை பாடசாலைகளில் வெளிவரும் வருடாந்த இதழ், மற்றும் ஏனைய வெளியீடுகளில் தனியாகவும் குழுவாகவும் உள்ள போட்டோக்களை வெளியிடுகின்றனர். அந்தக் குழு போட்டோவில் உள்ள பெண் பிள்ளைகளின் முகங்களை வெட்டியெடுத்து வேறு ஒரு ஆடவனுடன் அல்லது நிர்வாண போட்டோவுடன் இணைத்து வலையமைப்புக்களிலும் பேஸ் புக்கிலும் பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை பேணிப் பாதுகாப்பதில் முழு மூச்சுடன் பாடுபட்டு வருகின்ற அதேவேளை, அல்லாஹ்வையும் ரசூலையும் ஈமான் கொண்ட எந்தவொரு பெற்றோரும் இதனை அனுசரிக்கவுமாட்டார்கள். இருந்த போதிலும் பாடசாலைகளில் இவ்வாறு புகைப்படம் வெளியிட்டு மாணவிகளின் எதிர்காலத்திற்கு பங்கம் விளைவிக்கும் இவ்விடயத்தை தடை செய்வதில் உரியவர்கள் சிந்தித்து செயற்படுவதுடன் பெற்றோர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

நம்மையறியாமலேயே நம்மை போட்டோ, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் தற்போது மிக சாதாரணமாக எமது நாட்டிலும் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க பெண்களை குறி வைத்தே நடந்து வருகிறது. அப்பாவியான பல பெண்கள் இதற்கு பலியாகி வருகிறார்கள்.

பொது மலசல கூடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள்:

பொது மலசல கூடங்களுக்கு செல்வோர், பொது குளியலறைகளை பயன்படுத்துதோர் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லொட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், மலசல கூடம், குளியலறைகளிலும் 
கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா? என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் கேமராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம். ஆகவே கவனம் தேவை.

நெடுந்தூர பயணம் செய்யும் போது பெரும்பாலான மக்கள் பஸ் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு பஸ் பயணம் செய்யும் போது அந்த பஸ்கள் வெளி ஊர்களிலுள்ள உணவகங்களில் நிறுத்தப்படுகின்றன. அப்படி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் அத்தகைய உணவங்களில் உள்ள மலசல கூடங்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

அப்படிப்பட்ட உணவகங்களில் உள்ள சில மலசல கூடங்களில் வீடியோ 
கேமராக்களை மறைத்து வைத்து விடுகின்றனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் கேமராக்கள் மூலமாக அவர்களை ஆபாசமாகப் படம் பிடித்து அதனை உடனே குறுந்தகடுக்கு மாற்றி விற்று விடுகின்றனர். மேலும் இவற்றை சீடியாக மாற்றுவதோடு நின்று விடாமல் அதை இணையம் வரை கொண்டு சென்றும் பணம் சம்பாதிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, ஹோட்டலில் திருமணம் செய்து கொள்பவர்கள் அங்கே தங்கி விட்டும் வருகின்றனர். இவர்களை குறி வைத்தும் ஹோட்டல் அறைகளில் 
கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஹோட்டலில் தங்கும்போது அது நல்ல நம்பகமான தங்கும் விடுதியா என்று முடிந்தவரை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து நாம் போராடுகிறோமோ இல்லையோ குறைந்தபட்சம் நாமோ நமது குடும்பத்துப் பெண்களோ இது போல பொது இடங்களில் உள்ள மலசல கூடங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம் அல்லவா?.

மருத்துவமனைகளிலும் கவனம் தேவை!

மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தங்களால் முடியுமான வரை பெண் வைத்தியர்களை நாடுவது சிறந்ததாகும். அல்லது தக்க துணையுடன் செல்ல வேண்டும். மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும் ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக விலக்கும் போதும் கவனமாக இருங்கள். 
கேமராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் பரிசோதனைக்காக என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். சில மருத்துவர்கள் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து- வீடியோவாகவும் புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தும் வருகின்றனர். ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது சிறந்ததாகும்
.
புடவைக் கடைகளில் TRAIL ROOM கேமரா!

நாம் துணிக் கடைகளுக்கு செல்வது இயல்பானது. அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக் கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் அங்கு 
ண்டிப்பாக கேமராக்கள் தங்களை கண்காணிக்கப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா? துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

TRAIL ROOM CAMERAக்களை கண்டறியும் முறை:

TRAIL ROOM CAMERAல் இருந்து கொண்டு செல்போன் மூலமாக யாருகாகவாவது call செய்து பார்க்க வேண்டும். உங்கள் அழைப்பு- நீங்கள் அழைத்தவரை சென்றடைந்தால் அந்த அறையில் ரகசிய கமராக்கள் இல்லை. ஒருவேளை உங்கள் அழைப்பு நீங்கள் திரும்ப திரும்ப அழைத்தும் call செல்லவில்லை என்றால் அங்கு ரகசிய கமரா இருப்பது உறுதி என்று பொறியியலாளர்கள் கூறுகிறார்கள்.

TRAIL ROOM; கண்ணாடி

இவைகளைகப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை. இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும். இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றித்தான் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் 
கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம். ஆகவே இவைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது சிறு இடைவெளி தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி, இடைவேளை இல்லாமல் தெரிந்தால் அது உங்களை வேவுபார்க்கும் கண்ணாடி என்று அறிந்து கொள்ளலாம்.

ஹிஜாப் அணியும் பெண்களுக்கு பாதுகாப்பு!

இஸ்லாம் காட்டித்தந்த ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்கள் இந்த பிரச்சினையில் இருந்து இயல்பாகவே பாதுகாக்கபடுவார்கள்- இன்ஷா அல்லாஹ். இருப்பினும் இவை பற்றிய விழிப்புணர்வு முழுமையாக தேவை. ஏனெனில் ஹோட்டல், தங்கும் விடுதியில் இருக்கும் தூங்கும் அறை, கழிவறை போன்ற இடங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் நாம் சந்தேகபட முடியாது, எல்லா இடங்களையும் இது நம்பகமானது என்று நம்பவும் முடியாது. ஆதலால் முடிந்தவரை நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது; தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ, அவ்வாறே ஒரு முஸ்லிமின் உயிரும் உடமையும் மானமும் மரியாதையும் புனிதமானவை என்றார்கள். (புகாரி 67)

ஆகையினால் நவீன தொழில் நுட்பத்தின் பாரதூரமான விளைவுகளில் இருந்து நம்மையும் பாதுகாத்து மற்றோரையும் பாதுகாப்பதற்கு விழிப்புடன் செயற்படுவோம்.



6 comments:

  1. எங்கெங்கே ஆபத்துகள், என்னென்ன தற்காப்புகள் -விரிவாய் அளித்த நல்ல எச்சரிக்கைப் பதிவு.

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பதிவு.

    ReplyDelete
  3. கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய எச்சரிக்கை பதிவு .. நன்றி

    ReplyDelete
  4. நல்ல கட்டுரை,சிறந்த கருத்துக்கள் உங்கள் தளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்..உங்க கிட்ட இருந்து இதுபோல கட்டுரையை தான் எதிர்பாற்குறோம்..... ஆனந்தவிகடன்,குங்குமம்,இன்னும் பல அன்னகரீக புத்தகங்களை அப்லோட் செய்வதை விட்டுவிட்டு இதுப்போல கட்டுரை எழுத வாருங்கள் சகோ.மார்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் புத்தகங்களை தயவு செய்து அப்லோட் செய்ய வேண்டாம்(நிறைய பெண்களின் ஆபாச படங்கள் உள்ளதால்)..

    எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

    ReplyDelete
  5. கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய எச்சரிக்கை பதிவு .. நன்றி

    ReplyDelete
  6. good article sir..long live forever

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts