நாம் இணையத்தில் உலாவரும் போது நம்மை அறியாமலே சில மால்வேர்கள் நம் கணினியில் புகுந்து கொண்டு கணினியின் வேகத்தை குறைப்பதோடு நாளடைவில் நம் கணினியை செயலியக்க செய்து விடுகிறது. மற்றும் நம் கணினியின் ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறது. நாம் இணையத்தில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்து சில தேவையில்லாத பைல்களும் நம் கணியில் சேமிக்க படுகிறது. இதனாலும் நம் கணினி பாதிக்க படுகிறது. நீங்கள் எந்த ஆன்டி வைரஸ் உபயோகித்தாலும் அதை ஏமாற்றி விட்டு இவைகள் நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. ஆகவே இந்த பைல்களை நம் கணினியில் இருந்து எப்படி நீக்குவது என்று இங்கு காண்போம்.
Advance System Care Free 3.7.3
இந்த அபாயமான பைல்களை நம் கணினியில் இருந்து முற்றிலும் நீக்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது அதும் இலவசமாக. இந்த மென்பொருளில் நம்முடைய கணினியின் பிரச்சினைக்குரிய பைல்களை கண்டறிந்து முற்றிலுமாக நீக்கு கிறது. இந்த அருமையான மென்பொருள் இலவசமாக கிடைப்பது ஆச்சரியமே. இந்த மென்பொருளில் Spyware, malware, Junk files ஆகியவைகளை முற்றிலுமாக நம் கணினியில் இருந்து நீக்குகிறது. இந்த மென்பொருள் நாம் நீக்கும் பைல்கள் தானாகவே பேக்கப் எடுத்து வைத்து கொள்வதால் நமக்கு தேவைபட்டால் திரும்பவும் அதை நிறுவி கொள்ளலாம்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய
thanks bro
ReplyDeleteBeen using AVG antivirus for a few years now, and I would recommend this product to all of you.
ReplyDelete