Jul 16, 2011

Youtube-ன் Cosmic Panda - புதிய வசதிகளை நீங்களும் பயன்படுத்தி பார்க்க




கூகுள் தற்போது அதன் தளங்களை புதிய வடிவில் மாற்றி வருகின்றது. கூகுளின் தேடியந்திரம், ஜிமெயிலின் புதிய தோற்றம் மற்றும் பிளாக்கரின் புதிய தோற்றம் போன்ற மாற்றங்களை கூகுள் தற்பொழுது செய்துள்ளது. அடுத்து கூகுளின் வீடியோ தளமான யூடியூபிலும் புதிய தோற்றத்தை உருவாக்கி உள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரும் கூகுள் இந்த புதிய தோற்றத்தை சோதனை முறையில் தான் இப்பொழுது விட்டுள்ளது. வாசகர்களின் கருத்துகளின் படி ஏதேனும் மாறுதல்கள் தேவைபட்டால் செய்து கூடிய விரைவில் இந்த புதிய தோற்றத்தை அனைவரின் செயல்பாட்டிற்கும் விடப்படும்.


  • யூடியுபின் இந்த புதிய தோற்றத்தின் திட்டத்திற்கு Cosmic Panda என பெயரிட்டுள்ளது. 
  • இந்த புதிய தோற்றத்தை பெற இந்த லிங்கில் Youtube New Look கிளிக் செய்து அந்த தளத்திற்கு செல்லுங்கள். 
  • அந்த தளத்திற்கு சென்றவுடன் கீழே உள்ள Try it Out என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் யூடியுப் தளம் புதிய தோற்றத்துடன் மாறிவிடும்.

  • இந்த புதிய தோற்றத்தில் சில வசதிகளும் கூகுள் புகுத்தியுள்ளது. 
  • புதிய வகை கருப்பு நிறத்தினால் ஆனா நீளமான வீடியோ பிளேயரை இதில் அறிமுகபடுத்தி உள்ளனர். 
  • உங்களின் Playlist கண்டறிய மிக சுலபமாக வடிவமைத்துள்ளது.
  • நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வீடியோவை நிறுத்தாமல் எந்த அளவிலும் (Video Size) மாற்றி பார்த்து கொள்ளலாம்.
  • வீடியோக்களுக்கு கருத்துரைகள் கொடுத்தால் அவர்களின் ப்ரோபைல் படங்கள் தெரிகிறது. 
  • Related Videos பெரிய அளவில் காட்டுகிறது. 
மேலும் பல உபயோகமுள்ள வசதிகளை யூடியுப் புகுத்தியுள்ளது. இந்த புதிய தோற்றம் தேவையில்லை என நினைத்தால் Cosmic Panda இந்த தளத்திற்கு மறுபடியும் சென்று அங்கு உள்ள Older Version என்பதில் கிளிக் செய்தால் மறுபடியும் பழைய தோற்றத்தை பெறலாம். 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts